பாந்திரா-வொர்லி கடற்பாலம்
வாந்திரா-வொர்லி கடற்பாலம் மும்பையின் புறநகர் பகுதியான பாந்த்ராவை, மும்பை நகரப் பகுதியான தெற்கு மும்பையின் வொர்லியுடனும், பின்னர் நாரிமன் முனையுடனும் இணைக்கும் மேற்கு விரைவு நெடுஞ்சாலை திட்டத்தின் முதற்கட்டமாகும். இது எட்டு வழிகள் கொண்டதாய் முன்தகைவு திண்காறை பாதைப்பாலங்களைக் கொண்டு நடுவில் தொங்கு பாலத்துடன் அமைந்துள்ளது. மகாராட்டிர மாநில சாலை மேம்பாட்டு கழகம் (MSRDC)யின் ரூ 1600 கோடிகள் செலவான இந்த திட்டத்தை இந்துஸ்தான் கன்ஸ்ட்ரகுஷன் கம்பெனி (HCC) நிறைவேற்றியுள்ளது. வடிவமைத்து திட்டமேற்பார்வை யிட்டது டிஏஆர் கன்சல்ட்டன்ட்ஸ். 30 சூன் 2009 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் இதனை திறந்துவைத்தார்.இந்த கடற்பாலம், தற்போது 45-60 நிமிடங்கள் எடுக்கும் பாந்திரா (மராட்டி:வாந்திரா)-வொர்லி பயண நேரத்தை 07-08 நிமிடங்களாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.